வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஏப்ரல், 2013

சங்கப் பனுவல் படி!

சங்கப் பனுவல் படி!

விழுப்புரம் ‘சங்க இலக்கியப் பொதும்பர்’ என்ற அமைப்பு, ‘சங்கப் பனுவல் படி’ என்ற ஈற்றடி அமைத்து வெண்பா எழுதித்தருமாறு கேட்டபோது எழுதித்தந்த வெண்பாவை அனைவருடைய பார்வைக்குமாகக் கீழே தருகிறேன்:

இங்கிவ் வுலகில்நீ யாரென் றறிந்துணர
மங்காப் புகழ்ப்பண்பின் மாண்பறிய – கங்குலாய்த்
தங்கியுள இற்றையிழி தாழ்வகற்ற எந்தமிழா
சங்கப் பனுவல் படி.  

----------------------------------------------------